ஸத்குரு ஸ்வாமிகள் அவதார ஸ்தலம்
Life History
அவதாரம் (Birth)
1777 ஆம் ஆண்டு ஸத்குரு ஸ்வாமிகள் என்கிற வெங்கடராமன், கும்பகோணம் அருகே உள்ள திருவிசநல்லூரில், ஆந்திர தேஸ ஆத்ரேய கோத்ர தெலுங்கு ப்ராமண குடும்பத்தில், சேஷு சாஸ்திரிகளுக்கும் பார்வதி அம்மாளுக்கும் மூன்றாவது தவ புதல்வனாக அவதரித்தல்.
Sathguru Swamigal alias Venkataraman was the third son, born in 1777 AD to Seshu Sastrigal and Parvathy Ammal in Thiruvisanallur, near Kumbakonam, in a Telugu Andhra Bhrahmin family belonging to Athreya Gothra.
ராம தாரக நாமோபதேசம் (Initiation)
ஸ்வாமிகளின் மூன்றாவது வயதில் தனது தந்தையாரால் மணஞ்சேரி கிராமத்திற்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு திரு கோபால பாகவதரால் ராம தாரக நாமோபதேசம் அருள பெறல்.
When he was three years old, his father took him to Manancheri and got him blessed with Rama Tharaka Namopadesam through Gopala Bhagavathar.
உபநயனம் (Poonool Ceremony)
தனது தாய் மற்றும் தமையனார்கள் ஆசியுடன் தனது ஏழாவது வயதில் தனது தந்தையார் மூலம் உபநயன ப்ரஹ்மோபதேசம் பெறல். மற்றும் ப்ரஹ்மோபதேசத்தின் பொழுது சாக்ஷாத் ராமரே ஸ்வாமிகளின் ஹ்ருதயத்தில் தோன்றுதல்.
When he was seven years old, Swamigal receives Upanayana Brahmopadesam through his father accompanied by his mother and elder brothers. During Brahmopadesam, Lord Ram appears in his Heart.
வேத அப்யாசம் (Learning Vedas)
தனது தந்தையாரையே குருவாக ஏற்று அவரிடம் வேத சாஸ்திரங்கள் பல கற்று அதில் சிறந்த விற்பன்னராக விளங்குதல்.
With his father as his Guru, Swamigal learns many facets of Vedas and Sastras and he excels in all those.
இதிகாச புராணங்கள்
(Learning Hinduism and Tradition)
ஸ்வாமிகள் தனது தாயாரிடம் இதிஹாச புராணங்களையும் போதேந்திராள் மற்றும் ஸ்ரீதர ஐயாவாள் போன்ற மஹான்களின் வாழ்க்கை வரலாற்றினையும் அறிய பெறுதல்.
Swamigal learns the life history of Sri Bodhendral and Sri Sridhara Ayyaval from his mother along with Hindu puranams, Historical facts and Ancient stories about Hinduism and its glory.
மணஞ்சேரி ச்ராத்தம்
(Mananjeri Ritual)
தந்தையார் ஸ்வாமிகளை மணஞ்சேரியில் ச்ராத்தம் செய்ய அனுப்பி வைக்க ஸ்வாமிகளோ வழியில் உள்ள கோவிலில் ஆஞ்சநேயர் சன்னதியில் ராம நாம ஜபத்தில் லயித்து போக பொழுது சாய்ந்து வருத்தத்துடன் வீட்டிற்கு வந்து தந்தையிடம் மன்னிப்பு கேட்க தந்தையோ 'நீ தானே சிறிது நேரத்திற்குமுன் ச்ராத்த தக்ஷணையை ஊஞ்சலில் வைத்து விட்டு சென்றாய்' என்று வினவ சாக்ஷாத் அந்த ராமனே ஸ்வாமிகளுக்காக அந்த காரியத்தை நடத்தி வைத்ததை அறிந்து அனைவரும் மனமுவர்ந்து மகிழ்தல்.
Once Swamigal's father sends him to perform Sradham at Manancheri, he spends the whole day at a Temple chanting Rama Nama in Lord Anjaneya Sannithanam. When he returns home to ask for forgiveness from his father, his father reminds him that just a while back Swamigal himself had come and placed the Sradha Dakshina on the swing and left. When everyone realises that Lord Rama himself had performed the Sradham in Swamigal's place, they are elated with joy.
நாம சங்கீர்தனம் (Devotional Bhajans)
வேதங்களில் அதீத தேர்ச்சி பெற்றிருப்பினும் கூட இசையோடு கூடிய நாம சங்கீர்தனத்திலேயே ஸ்வாமிகளின் மனம் லயித்து விட ஸ்வாமிகள் இடை விடாது ராம நாமத்தை ஜபித்துக்கொண்டும் நாம சங்கீர்த்தனங்களையே பாடிக்கொண்டும் இருத்தல்.
Even though Swamigal was an expert in Veda Sastras, his mind was always occupied with Rama Nama Japam and he was only interested in singing Nama Sangeerthanam all the time.
கல்யாண வைபவம் (Marriage Ceremony)
ஸ்வாமிகளின் பதினைந்தாவது வயதில் அவரது பெற்றோர்கள் அவருக்கு சுப்பலக்ஷ்மி என்கிற அலமேலுவை மணமுடித்து வைத்து மகிழ்தல்
When Swamigal was fifteen years old, his parents happily get him married to Subbalakshmi (@) Alamelu
பாத யாத்திரை (Travel by foot)
தனது தந்தையாரை இழந்து பின் தனது துணைவியாரையும் இழந்து சொந்த பந்த சுமைகளில் இருந்து விடுபட்ட ஸ்வாமிகள் உஞ்சவ்ருத்தி என்னும் உயர்ந்த கடை பிடிக்க துவங்கி தனது தாயாருடன் வடக்கு நோக்கி நடை பயணமாக புறப்படல்
After the sad demise of his Father and subsequently of his wife, devoid of any relationship to tie him down, Swamigal decides to follow the great principle of Uncha Vriththi dharma and goes on a Patha Yatra to North along with his mother.
பஜனைகள் மற்றும் முறைகள் (Bhajan and Procedures)
ஆந்திரா கர்நாடகா ஒரிஸா மற்றும் பல இடங்களில் வெவ்வேறு மொழிகளில் இருந்த துளசிதாஸ் சூர்தாஸ் அன்னமாச்சார்யா ஜெயதேவர் மற்றும் பலரது பஜனைகளையும் பஜனை முறைகளையும் சேகரித்து தக்ஷிண பாரத ஸம்ப்ரதாய பஜனை முறையை தோற்றுவித்தல்.
Swamigal spends considerable time and effort in collecting and consolidating different language Bhajans of Tulsidas, Surdas, Annamacharya & Jayadev etc from various places such as Andhra, Karnataka & Orissa along with the methods of performing the same, thus establishing what we currently call as Dakshin Bharat Sampradaya Bhajan Padhathi
குரு போதேந்த்ராள் கட்டளை (Guru Bodendral's order)
ஸ்வாமிகளின் மானசீக குருவான போதேந்திராள் அவரது நிஷ்டையில் தோன்றி அவரது அவதாரத்தின் காரணத்தை நினைவுபடுத்தி அதை நிறைவேற்ற மறுபடியும் தென் தேசத்திற்கே செல்லுமாறு கட்டளையிடல்.
Sri Bodhenthral, who Swamigal considered as his spiritual Guru, appears in his dream, reminds Swamigal of his unfinished task and orders him to go back to his birth place in South.
தென் தேசம் திரும்புதல் (Returning home)
ஸ்வாமிகளின் தாயாரும் தவறி விட தனது மானசீக குருவின் கட்டளையை ஏற்று ஸ்வாமிகள் தனது சீடர்களுடன் புறப்பட்டு தனது பூர்வீகமான தமிழகத்தை வந்தடைதல்.
Having lost his mother too, Swamigal decides to follow the orders of his spiritual Guru and travels back to Tamilnadu along with his disciples.
போதேந்த்ராள் ஜீவ சமாதி (Bodenthral Tomb of life)
மண் மூடி மறைந்து இருந்த போதேந்திராளின் ஜீவ சமாதியை கண்டு பிடிப்பதை லட்சியமாகக்கொண்டு ஏழு நாட்கள் உபவாசம் இருந்து வறண்டு கிடந்த வீர சோழன் (காவிரி) ஆற்றில் ராம நாம சப்தத்தை உருண்டு கேட்டு கோவிந்தபுரத்தில் அதனை அடையாளம் கண்டு கொள்ளல்.
Swamigal decides to unearth the Jeeva Samadhi of Sri Bodhenthral and after fasting for seven days, he rolls along the dry Veera Cholan (Cauvery) river bed carefully listening for the Rama Nama chanting and finally discovers the Samadhi in Govindapuram.
போதேந்த்ராள் மடம் (Bodenthral Mutt)
தஞ்சை மன்னர் சரபோஜி மகாராஜாவின் உதவியுடன் ஆற்றின் போக்கை திசை திருப்பி போதேந்திராள் ஜீவ சமாதி இருந்த கோவிந்தபுரத்தில் போதேந்திராள் மடம் அமைத்தல் மற்றும் அதனை சுற்றி உள்ள இடங்களை பாகவதபுரம் என்று பெயரிட்டு அரசரிடம் மானியமாக பெறல்.
With the help of Tanjore King Sarfoji, Swamigal constructs Bodhenthral Mutt in Govindapuram. Per Swamigal's wishes, the King further designates the places around the Mutt as Bhagavathapuram and allocates it exclusively for Bhajan Bhagavathars.
பாலகணேசன் (Balaganesan)
உஞ்சவிருத்தி பஜனையின் பொழுது பாலகணேசன் என்கிற ப்ராஹ்மணர் ஸ்வாமிகள் வந்த திசையில் கால் நீட்டி அவதூறாக பேசியதனால் வயிற்று வலியால் துடித்து பரிகாரம் தேட பாகவத பாத பூஜையே அதற்கு பரிகாரம் என்று ஸ்வாமிகள் கூற அவ்வாறே பாத பூஜை செய்து குணம் பெற்று 'அதடே பரப்ரஹ்மம்' என்ற பாடலை பாடி ஸ்வாமிகளிடம் சரணடைதல்.
Once during Unchavruththi, a Brahmin named Balaganesan refuses to remove his foot which was in Swamigal's way and speaks low of Swamigal, following which he is afflicted with severe stomach pain and taking Swamigal's advise, does Patha Pooja for swamigal, gets cured, sings the song 'Athade Parabrahmam' in praise of Swamigal and also becomes a disciple of Swamigal.
மருதாநல்லூர் மடம் (Maruthanallur Mutt)
தஞ்சாவூர் அரசரின் உதவியுடன் மருதாநல்லூரில் மடம் அமைத்து அதில் தனது சீடர்களுடன் பஜனை சம்பிரதாயத்தை பரப்புதல் மற்றும் அரசரின் கனவில் தோன்றிய ராமனின் உத்தரவின் பேரில் அரசன் அளித்த வெள்ளி விக்ரஹங்களை வைத்து பூஜித்தல்.
With the help of Tanjore King, Swamigal establishes a Mutt in Maruthanallur and spreads the Bhajan Sampradaya along with his disciples. The king also presents Swamigal with silver statues of Lord Ram based on the instructions received from Lord Ram in his dreams, which the Swamigal duly accepts and worships.
இறைவனடி சேர்தல் (Attain Mukthi)
தஞ்சாவூரிலிருந்து திருவையாறு வழியாக வரும் பொழுது ஆடுதுறை பெருமாள் கோவில் எனும் ஊரில் சைத்ர கிருஷ்ண அஷ்டமியன்று ஜெகத்ரக்ஷக பெருமாளுடன் 1817ல் ஐக்கியமாகுதல்.
In the year 1817, during his return from Thanjavur via Thiruvayyar, during Chaitra Krishna Ashtami, Swamigal merges himself with Jagath Rakshaka Perumal in the town named Aduthurai Perumal Kovil.
பஜனை சம்ப்ரதாயம் தொடர்ச்சி (Bhajan Tradition Continues)
சத்குரு ஸ்வாமிகள் ஏற்படுத்தி தந்த வழியில் இன்றளவும் ஏராளமான சம்பிரதாய பஜனைகள் உலகமெங்கும் தினந்தோறும் நடந்தேறி வருகின்றன.
In the tradition established and prescribed by Sathguru Swamigal, several Sampradaya Bhajans are being conducted daily, the world over